தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை
Prathees
3 years ago

விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிக்கு இடையில் லொறியொன்று கவிழ்ந்தமையே இதற்குக் காரணம்.
கொட்டாவை முதல் மாத்தறை வரையிலான பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
லொறியின் பின்பகுதியில் பௌசர் மோதியதில் லொறி வீதியின் குறுக்கே கவிழ்ந்தது.



