இன்னும் ஆயிரம் கோடி ரூபாய் அச்சடிக்க வேண்டும்..- பிரதமர்
#SriLanka
#Ranil wickremesinghe
#PrimeMinister
Mugunthan Mugunthan
3 years ago
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலம் மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றும், அந்த நேரத்தில் நாட்டில் பணவீக்கம் 40% ஐத் தாண்டும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை வேறு நிவாரணத் திட்டங்களுக்குத் திருப்பிவிடலாம் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.