உலகில் அதிக பண வீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!
Nila
3 years ago

உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.
உலக பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹென்கியின் மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முதலாவது இடத்தில் சிம்பாவ்வேயும், இரண்டாவது இடத்தில் லெபனானும் மூன்றாவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது.
கடந்த பெப்பிரவரி மாத்தில் இலங்கை இரண்டாம் இடத்தில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பெயரிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



