மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!
Reha
3 years ago

மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனூடாக, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தற்போது திட்டமிடப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



