எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் அதிருப்தி! மீன்களின் விலைகளும் அதிகரிப்பு
Mayoorikka
3 years ago

குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தின் பாதுகாப்புச் சாவடி மீது மீனவர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் இல்லாததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் சிலர் இந்த தாக்குதலை நடத்தியதாக தங்காலை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் இல்லாமல் தமது மீன்பிடி படகுகள் தொழிலுக்கு செல்ல முடியாது எனவும் நேற்றிரவு இந்த தாக்குதலினால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நாடுமுழுவதும் மீன்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



