வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் வரையறை!

Mayoorikka
3 years ago
வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் வரையறை!

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக வரையறைகளில் இன்று(24) முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

அதேநேரம், கார் மற்றும் வான் ஆகியனவற்றுக்கு 10,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

பேருந்துகள் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்த மட்டுப்பாடுகள் இல்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!