முச்சக்கர வண்டி கட்டணத்திலும் அதிகரிப்பு
Prabha Praneetha
3 years ago

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, கடந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் எரிபொருள் விலைகள் அதிகரித்தபோது முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது பயணிகளுடன் கலந்துரையாடி கட்டணத்தை தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி நடத்துனர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தற்போது அந்த பேச்சுவார்த்தை நடத்துவது கடினமான சூழ்நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



