குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்
#SriLanka
#Lanka4
Shana
2 years ago

இடமாற்ற கோரிக்கையை அடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பொறுப்பதிகாரியான டபிள்யூ. திலகரட்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டபிள்யூ. திலகரத்ன, அக்டோபர் 28, 2021 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
மேலும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரசாத் ரணசிங்க தற்போது நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



