சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெனாண்டோவின் எச்சரிக்கை!
Mayoorikka
3 years ago

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு மீண்டும் ஸ்திரமான நிலைக்கு அடைந்து ஜனநாயகத்திற்கு மதிக்கும் நாடாக மாற வேண்டியது கட்டாயமாகும் என தெரிவத்துள்ளார்.
அமைச்சரவையில் சமர்பித்து அதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாராளுமன்றத்திலேயே உள்ளன.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பர்கள் என நாம் நம்புகின்றோம் என ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.



