மேற்குலக நாடுகள்.... இலங்கைக்கும், உதவிகளை வழங்க வேண்டும் – சீனா வலியுறுத்து!
#SriLanka
#China
Mugunthan Mugunthan
2 years ago

உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சர்வதேச சந்தையில் 47 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
அதில் 10 சதவீத கடனையே சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.



