வழமைக்கு திரும்பியது நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பணி
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய கட்டமைப்பில் இணைக்கும் பணி இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, மொத்த கொள்ளளவான 270 மெகாவோட் நாளை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 20 நாட்களாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை.
மேலும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இணைப்பதன் மூலம் தற்போதுள்ள மின்வெட்டை ஓரளவுக்கு குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



