கடுமையான அழுத்தம்: CID பணிப்பாளர் பதவி விலகத்தீர்மானம்
Prathees
2 years ago

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ திலகரத்ன அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
காவல்துறையில் பணிபுரிய தகுந்த வேறு இடம் வழங்க வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த பதவியில் பணிபுரியும் போது தனக்கு கடுமையான அழுத்தங்கள் வழங்கப்படுவதாக அவர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



