கொக்கட்டிச்சோலையில் யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு

#SriLanka #Batticaloa #Lanka4
Shana
2 years ago
கொக்கட்டிச்சோலையில் யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை அடைச்சல்குளத்துக்கு அருகில் யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புன்சேனை அடைச்சல் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் குணராசா என்பவரே இவ்வாறு நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று மாலை 3.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் கல் தூரம் கொண்ட அடைச்சல் குளப்பகுதியில் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்ற நிலையில் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரின் உறவினர்கள் அவரை மீட்டு வீட்டுக்குக் கொண்டு சென்றநிலையில் இரவு 11 மணிக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து சடலத்தை அங்கிருந்து பொலிஸார் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!