எரிவாயு விநியோகம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை
Prabha Praneetha
2 years ago

எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செயலி எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுமென்று நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் கூறினார்.
இதன் மூலம் நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.



