இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராக வெளிநாட்டில் வழக்கு!
Nila
2 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான நெதர்லாந்தின் ஹேக் நகரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் 20ம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தற்போது சுவிஸ் வசிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியமளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



