உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா: சரணடைந்த 531 பணியாளர்கள்

உக்ரைனின் மரியுபோலில் உள்ள எஃகு ஆலை முற்றுகையிடப்பட்டதகவும், 531 உக்ரைனின் பாதுகாவலர்கள் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறுகிறது. வெள்ளியன்று (2022, மே 20), மரியுபோல் மற்றும் எஃகு ஆலை இரண்டும் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இந்த செய்தியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் மொத்தம் 2,439 உக்ரைன் பாதுகாவலர்கள் சரணடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மரியுபோலில் உள்ள எஃகு ஆலையின் முழுக் கட்டுப்பாட்டையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.
இந்த ஆலையானது, மரியுபோல் நகரத்தில் உக்ரேனியர்களின் வசம் இருந்த மிகவும் முக்கியமான ஆலையாகும். உக்ரைனிடம் தற்போது இந்த நகரில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், உக்ரைனின் வலுவான கடைசி கோட்டை இந்த எஃகு ஆலை என்றும் கூறப்படுகிறது.
மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த உக்ரேனியப் படைகளின் கடைசிக் குழு சரணடைந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் சுமார் 531 பேர் இருந்தனர்
ரஷ்ய ராணுவத்தின் இந்த முன்னேற்றமானது, அந்நாட்டின் மூன்று மாத கால முற்றுகையின் வெற்றியை குறிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "அசோவ்ஸ்டல் உலோக ஆலையின் பிரதேசம் ... முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது."



