எரிபொருள், கேஸ், நீர், மின்சாரம் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும்
#SriLanka
#Central Bank
#prices
Mugunthan Mugunthan
2 years ago

எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே இது போன்ற பரிந்துரையைச் செய்ய வேண்டியுள்ளதென்றும் அவர் கூறினார்.
இலங்கையின் வரி வருமானம் குறைவாக இருப்பதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.



