உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கைக்கு கைகொடுக்கின்றன

மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 73 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக வங்கி இரண்டு பிரிவுகளின் கீழ் பணத்தை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முதல் $23 மில்லியன் வழங்கப்படும், அதைத் தொடர்ந்து மீதமுள்ள $50 மில்லியன் வழங்கப்படும்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) சுகாதாரத் துறையில் ஏனைய நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 21.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை மருந்துக் கொள்வனவுக்காக துரிதப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அந்தத் தொகைக்கு மேலதிகமாக மேலும் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை மருந்துக் கொள்வனவுக்காக ஒதுக்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை இலங்கைக்கு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



