கிழக்கு உக்ரைனில் ரஷியா உக்கிர தாக்குதலில் 13 பேர் பலி
#world_news
#Russia
#Ukraine
Mugunthan Mugunthan
3 years ago
தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. தொடர்ந்து ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத் தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதன் பிராந்திய கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார். அங்கு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செவிரோடொனெட்ஸ்க் நகர் மீதான ரஷியாவின் தாக்குதல் வெற்றி பெறவில்லை, ரஷிய படைவீரர்களுக்கு இழப்பு ஏற்பட்டு, அவர்கள் பின்வாங்கினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.