நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!
Mayoorikka
2 years ago

நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் நாளை தரையிறக்கப்பட்டவுள்ளதாக எரிசக்தி மற்றம் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பமானதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



