இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் 22ஆம் திகதி இலங்கைக்கு
Mayoorikka
3 years ago
இந்தியாவினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் குறித்த கப்பலில் 9 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் அளவிலான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி அனுப்பப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சுமார் 5.5 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.