பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்க தயார்: மகிந்த ராஜபக்ச
Prathees
2 years ago

காலி முகத்திடலில் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமரிடம் சிங்கள ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற பொலிசார் அறிவித்தால் அதற்கு தயாராக இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



