வட கொரியாவில் கொரோனா 2.62 லட்சம் பேருக்கு தொற்று

#Covid 19 #NorthKorea
Prasu
3 years ago
வட கொரியாவில் கொரோனா 2.62 லட்சம் பேருக்கு தொற்று

வட கொரியாவில், கொரோனாவால் புதிதாக 2.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக அங்கு வைரசால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில், 2.62 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 19.8 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா அறிகுறிகள் இருக்கும் மக்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகளில், 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், தலைநகர் பியாங்யாங்கில், மருந்துகள் வினியோகிக்கும் பணிகளில், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!