தீயை நான் பற்ற வைக்கவில்லை... பாகிஸ்தான் மாடல் வெளியிட்ட புதிய வீடியோ

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டிய நிலையில், கடுமையான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, பற்றி எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டார்.
மேலும் அந்த பதிவில் "நான் எங்கிருந்தாலும் நெருப்பு பற்றிக் கொள்ளும்." என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்தில் வைரல் ஆகிவிட்டது. இது குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடுமையாக கண்டனம தெரிவித்தனர். மேலும், கடுமையான வெப்பத்தில் தவிக்கும் பாகிஸ்தான் மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியது.
#Pakistani #TikTok sensation who faced backlash for posing by #forestfire has issued a video explanation and clarified her stand. Watch this video to know more.#HumairaAsghar #ViralVideo pic.twitter.com/SdNqGMNZ0i
— India.com (@indiacom) May 19, 2022
இணையதளத்தில் கடுமையான விமர்சனங்களை பலர் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.
மக்கள் உண்மையை அறியாமல் விமர்சனம் செய்கின்றனர்; அந்த தீயை நான் மூட்டவில்லை என்றும் அவர் அதில் விளக்க அளித்துள்ளார்.
புதிய வீடியோவில், அவர் வைரல் ஆன வீடியோவில் அணிந்திருந்த அதே உடையில் அணிந்திருப்பதையும், பின்னணியில் நெருப்பு எரிவதையும், அவருக்கு அருகில் ஒரு நபர் இருப்பதையும் காணலாம். அதில் அவர், “நண்பர்களே இதைப் பாருங்கள், நாங்கள் இங்கு வந்திருக்கிறோம், காட்டில் எரிகிறது பாருங்கள். நாங்கள் அவரிடம் இது பற்றி கேட்டோம், அவர் சொன்னது என்ன என்பதை நீங்களே கேளுங்கள்” என்கிறார்.
அப்போது அங்கு வசிக்கும் அந்த நபர் பெரிய பாம்புகளை விரட்டுவதற்காக புதர்களுக்கு தீ வைப்போம் என்று அந்த மனிதர் விளக்குகிறார். பாம்புகள் தங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால், பாம்புகளை விரட்ட புதர்களுக்கு தீ வைப்பது வழக்கம் என்றார்.



