திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் கைகலப்பு - கடுமையாக தாக்கிக்கொண்ட மக்கள்

#SriLanka #Trincomalee #Lanka4
Shana
2 years ago
திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் கைகலப்பு - கடுமையாக தாக்கிக்கொண்ட மக்கள்

திருகோணமலை - மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர்.

எனினும், இந்த மோதலுக்கான காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

சில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பல நாட்களாக மோதல் வெடித்துள்ளது.

இவ்வாறான நிலையில், திருகோணமலை - மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!