மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பேருந்துக்கு தீ மூட்டிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
Reha
3 years ago

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று நுகேகோடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் நேற்று குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும், விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



