இலங்கைக்கு ஜப்பானில் இருந்து அவசர உதவி கிடைக்கவுள்ளது.
#SriLanka
#Japan
#Dollar
Mugunthan Mugunthan
2 years ago

அவசரகால மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் மற்றும் உலக உணவுத் திட்டம் மூலம் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுகளை வாங்குவதற்கு 3 மில்லியன் டாலர்களை வழங்குவதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
இதில் 1.5 மில்லியன் டாலர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் 25 அத்தியாவசிய மருந்துகளை வாங்க பயன்படுத்தப்படும்.
இலங்கையில் 1.2 மில்லியன் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள $1.5 மில்லியன் உலக உணவுத் திட்டத்தின் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கப் பயன்படுத்தப்படும்.



