IMF உடனான தொழிநுட்ப கலந்துரையாடல் நிறைவிற்கு!!
#SriLanka
#IMF
#Tech
Mugunthan Mugunthan
2 years ago

இலங்கைக்கான கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்களை மே 24 ஆம் திகதி நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உரையாடிய அதன் செய்தித் தொடர்பாளர் கேரி ரைஸ் (Gerry Rice), நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சரியான நேரத்தில் தீர்க்க சம்பந்தப்பட்ட கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



