காலநிலை மாற்றங்களினால் தத்தளிக்கும் உலகம்

Nila
2 years ago
காலநிலை மாற்றங்களினால் தத்தளிக்கும் உலகம்

தற்போது உலகளவில் காலநிலை மாற்றங்கள் பாரியளவில் இடம் பெற்று வருவதாகவும் இதன் காரணமாக வழமைக்கு மாறான பல சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரான்ஸ் என்றுமில்லாத பாரிய வெப்ப காலநிலைக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பனி மலைகள் உருகும் விகிதம் முன்னரை விட 2 மில்லி மீற்றர் அளவு அதிகரித்து இருப்பதாகவும் இதனால் கடல் நிலைகளின் உயர்வு மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் உலக காலநிலை மையத்தின் தலைவர் பெற்றோ தெரிவித்துள்ளார்.

மேலும் குளிர் வலய பிரதேசத்தில் வாழும் பறவைகள் மற்றும் விலங்குகள் என்பனவும் அதிகரித்து வரும் வெப்பத்தினால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்துவரும் தொழிற்சாலைகளின் பெருக்கம் மற்றும் நச்சுப்பொருட்களின் பாவனை அதிகரிப்பு போன்றவையே இதற்கான பிரதான காரணிகளாக இருக்கலாம் என உலக காலநிலை மையத்தின் எச்சரிக்கை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பாக்கிஸ்தானிலும் இதுபோன்ற அதிகரித்த வெப்ப காலநிலை உருவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்க அதேவேளை சவுதி அரேபியா மற்றும் கிழக்கு நாடுகளில் அதிகரித்த மணல் புயல் கொட்டுவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!