நாடாளுமன்றத்தில் உணவு வேண்டாம்: 53 எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்
Prathees
2 years ago

நாடாளுமன்றத்தினால் தமக்கு வழங்கப்படும் மதிய உணவை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரி 53 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (19) கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுமார் 700 பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை நாள் முழுவதும் பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் மட்டுமே சாதாரண விலையில் உணவு பார்சல் வழங்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



