ரணில் ஓரிரு மாதங்களில் பதவி விலக வேண்டும்: ஹிருணிகா
Prathees
2 years ago

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஓரிரு மாதங்களில் பதவி விலக வேண்டும். இல்லையேல் அவர் அதிலிருந்து நீக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, ஜி.எல். பீரிஸ் போன்ற ஒருவர் பிரதமராக வருவார் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும், ராஜபக்சக்களின் பாதுகாப்பின்மையும் குறையும் வரைதான் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இம்முறை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற போதிலும், எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேவ தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



