நடுவானில் 36,000 அடி உயரத்தில் பிறந்த குழந்தை-புதுவிதமான பெயரிட்ட தாய்

Prasu
3 years ago
நடுவானில் 36,000 அடி உயரத்தில் பிறந்த குழந்தை-புதுவிதமான பெயரிட்ட தாய்

அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, விமான ஊழியர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவினர்.

அமெரிக்காவில் டென்வெரிலிருந்து ஓர்லாண்டோ செல்லும் ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை பென்சகோலா விமான நிலையத்திற்கு திருப்ப விமான கேப்டன் நை முடிவெடுத்தார்.

இந்நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட விமானப் பணிப்பெண் டயானா ஜிரால்டோ, குழந்தை பெற்றெடுக்க கர்ப்பிணிக்கு உதவினார். இதன்காரணமாக, விமானம் தரையிறங்கும் முன்பே பெண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்த பெண். விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பூரண ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாக தெரிவித்தனர்.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் தாய், பிறந்த இடத்தை குறிக்கும் வகையில், தனது குழந்தைக்கு "ஸ்கை" (வானம்) எனப் பெயரிட்டார். ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தையும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய விமான ஊழியர்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!