கோபா குழுவின் முதலாவது அறிக்கை நாளை பாராளுமன்றத்தில்

Mayoorikka
2 years ago
கோபா குழுவின் முதலாவது அறிக்கை நாளை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரணவினால் நாளை (20) பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படவுள்ளது.

2021.08.04 முதல் 2021.11.19 வரையான காலப்பகுதியில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட 07 அரச நிறுவனங்கள் மற்றும் ஒரு விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பான விசாரணை பற்றிய தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சமூக அபிவிருத்தித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், குருநாகல் மாநகர சபை, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம், சுற்றாடல் அமைச்சு மற்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவினால் மேற்கொள்ளப்படும் மருத்துவ விநியோகங்கள், விநியோக முறை தொடர்பில் 2018 மார்ச் 14 ஆம் திகதியிலான கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பாக விசாரணை செய்யப்பட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!