எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டம்!

Reha
2 years ago
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டம்!

இலங்கையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கான சம்பளக் குறைப்பை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தேசிய சுகாதார சேவைகளை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பிரச்சினைகளை தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கத் தவறினால், எதிர்வரும் மே 25ஆம் திகதி சுகாதாரத் துறையின் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!