வெளிநாட்டுக் கடன் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
#SriLanka
#Dollar
Mugunthan Mugunthan
2 years ago

மீளச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். சமகி ஜனபலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு பதிலளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்.இந்த விவாதத்தில் பிரதமரும் கலந்து கொண்டார்.
தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு வங்கிகளுடனான நிதி ஒப்பந்தங்களும் இரத்துச் செய்யப்படுவதாக சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.



