இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதில் சிக்கல்!
Nila
2 years ago

இனி வரும் காலங்களில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்காதநிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடனை மீள் செலுத்த தவறினால் இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் அலிசப்ரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை பெற்றுக் கொண்ட கடன் தொகை ஒன்றிற்கு இன்றைய தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்கம் அதனை செலுத்த தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



