மொரட்டுவை மேயர் - டான் பிரியசாத் கைது

Mayoorikka
2 years ago
மொரட்டுவை மேயர் - டான் பிரியசாத் கைது

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மொரட்டுவ நகரசபை தலைவர் சமன் லால் பெர்னாண்டோ / சீதாவகபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன / களனி பிரதேச சபை உறுப்பினர்களான மஞ்சுள பிரசன்ன மற்றும் டான் பிரியசாத் ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து அவர் வெளியேறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!