பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை

#United_States
Prasu
2 years ago
பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை

பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது.  கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் (யூ.எஃப்.ஓ) தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது. 

இந்தியானா மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கார்சன் கூறுகையில், ‘50 ஆண்டுகளுக்கு பிறகு பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நடைபெறவுள்ளது. புலனாய்வுத்துறைக்கு கீழ் நடைபெறும் இந்த வழக்கில், பறக்கும் தட்டுக்களால் நமது தேசத்திற்கு ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கு நடைபெறவுள்ளது. விளக்கம் அளிக்க முடியாத பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்கர்கள் மேலும் அறிந்துகொள்வதற்காக இந்த வழக்கு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு மத்தியில் நடைபெறும் இந்த விசாரணையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உரையாற்றவுள்ளனர். இதை தொடர்ந்து வானில் தோன்றும் பொருட்களை கண்டறிதல் என்ற பெண்டகன் திட்டத்தின் கீழ் ரகசிய விசாரணை ஒன்றும் நடைபெறவுள்ளது.

இந்த விசாரணையின் மூலம் நம் காலத்தின் மிகப்பெரிய மர்மமான பறக்கும் தட்டுக்கள் குறித்த விஷயங்கள் பொதுமக்களுக்கு தெரிய வரும். இந்த விஷயங்களில் நிபுணர்களாக இருப்பவர்களே நேரடியாக மக்களுக்கு விளக்கம் தருவார்கள் என கூறப்பட்டுகிறது.

இந்த விசாரணையை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் மே 17-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு காணலாம். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!