ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக சுதந்திரக்கட்சி எம்பி தெரிவிப்பு
Prathees
2 years ago

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் தாம் முன்மொழிந்த போதிலும் கட்சி அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது முடிவை கட்சி ஏற்காவிட்டால், தனித்து ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறுகிறார்.
இந்த முக்கியமான தருணத்தில் கட்சி வேறுபாடுகளைக் களைந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றார்.



