ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: 230 பேர் கைது, 68 பேர் விளக்கமறியலில்
#SriLanka
#Protest
Prasu
2 years ago

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 170 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
மே 09 ஆம் திகதி முதல் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்



