வெசாக் போயாவை முன்னிட்டு பிரதமரின் செய்தி
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை போக்க கௌதம புத்தரின் தம்ம போதனைகளை நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெசாக் பௌர்ணமி தின வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பு கௌதம புத்தருக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கட்டுப்பாடும் ஸ்திரத்தன்மையும் மீளமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், கௌதம புத்தரின் தத்துவ அர்த்தமுள்ள “சப்த அபரிஹானி” கோட்பாடு மிகவும் நடைமுறை அரசியல் வழிகாட்டல் என்று கூறினார்.
லிச்சவி இராச்சியத்தின் ஆட்சியாளர்களுக்கு புத்தரின் பிரசங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, நாட்டில் ஏற்பட்டுள்ள , இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து வெளிவருவதற்கு இலங்கையர்களும் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.



