பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன?
Prabha Praneetha
2 years ago

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை கட்சி பரிந்துரைக்கும் என சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவை தமது வேட்பாளராக முன்மொழியவுள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாக உள்ளது.



