சஜித் அரசாங்கத்தை அமைக்க விரும்பிய போது ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது: கிரியெல்ல
Prathees
2 years ago

சஜித் பிரேமதாச அரசாங்கத்தை அமைக்க விரும்பிய போதிலும், தனி ஆசனத்தைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேக கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



