நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

#Covid 19 #President
Prasu
2 years ago
நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களுக்கு பாதுப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக தலைவர்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கினர். அதில் சிலர் மரணமடைந்தனர். பலர் மீண்டு வந்தனர். 

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 
 
இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் லேசாக இருப்பதாகவும், இதனால் அவர் ஏழு நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது சிறப்பாக நிர்வாகம் செய்து, அந்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!