நோட்டோ அணு ஆயுதங்களை உபயோகித்தால் கடும் விளைவை சந்திக்கும் - ரஷ்யா எச்சரிக்கை

#Russia
Prasu
2 years ago
நோட்டோ அணு ஆயுதங்களை உபயோகித்தால் கடும் விளைவை சந்திக்கும் - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 80 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படையெடுப்பிற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதால் அஞ்சிய  ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் பாதுகாப்புக்காக நேட்டோவில் இணையப்போவதாக கூறி வருகின்றன.

இரண்டு நாடுகளும் ஓரிரு வாரங்களில் நேட்டோவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு ரஷியா மூலம்  ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் நேட்டோ படைகள் ஓர் ஆண்டுகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில் தங்களுடைய அச்சுறுத்தலுக்காக இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதாக கூறுவது உண்மையான காரணம் போல தோன்றவில்லை என ரஷிய வெளிநாட்டு மந்திரி அலெக்சாண்டர் குருஷ்கோ தெரிவித்துள்ளார். ரஷியாவிற்கு ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு எதிரான விரோத நோக்கங்களும் எங்களுக்கு இல்லை. இந்த நிலையில் அச்சுறுத்தலுக்கு பயந்து இரு நாடுகளும் நேட்டோவில் இனைவது உண்மை என்று தோன்றவில்லை.

ஒருவேளை நேட்டோ ரஷிய எல்லைகளில் அணு ஆயுதங்களை கொண்டு வந்து நிறுத்தினால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம். அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என  கூறினார்.

இதை தொடர்ந்து ரஷியா ஃபின்ன்லாந்துக்கு அளித்து வரும் மின்சார விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக ஃபின்லாந்து மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Silicon Valley's wealthiest Russian is carefully distancing himself from  Putin - The Economic Times

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!