ரணிலின் நியமனம் அரசியல் நெருக்கடியை உருவாக்கும்.?. குழப்பத்தில் ரணில்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மற்றுமொரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அறிவித்துள்ளன
நாட்டில் அராஜகங்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு மாத்திரமே ஆதரவளிப்போம் என்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த சுயேச்சைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியதன் பின்னர், பிரதமர் தமக்கு நாடாளுமன்றத்தின் நம்பிக்கை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கட்சி எம்.பி.க்கள் குழுவொன்று முன்மொழிவதற்கு தயாராகி வருகிறது.
பிரதமர் தம்மீது நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது வழமை என்பதால், இந்த பிரேரணை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



