புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள்!!-

Prabha Praneetha
2 years ago
புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள்!!-

நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சு பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை தாம் பொறுப்பேற்க தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான தனது தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற போவதில்லை என ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் வழங்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தாம் நேற்றைய நாளில் முதன் முதலாக அறிவித்ததாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!