ரணில் தலைமையிலான அரசாங்கத்தை ஊக்குவிப்போம்:பிரித்தானியா
#SriLanka
#UnitedKingdom
#Ranil wickremesinghe
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்காக அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது.
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.



