பிரதமர் ரணில் சுமந்திரனுக்கு தொலைபேசியில் எடுத்துரைத்தது என்ன ?

#SriLanka #Ranil wickremesinghe #M. A. Sumanthiran
பிரதமர் ரணில் சுமந்திரனுக்கு தொலைபேசியில் எடுத்துரைத்தது என்ன ?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழுவிற்குத் தலைமைதாங்க சுமந்திரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஸ்திரமான அரசாங்கம் இன்றியமையாததாகும் எனத் தெரிவித்த சுமந்திரன் எம்.பி, எனவே தற்போதைய அரசாங்கத்தின் சரியான செயற்பாடுகளை நாம் ஆதரிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ்மக்கள் சார்ந்த அரசியலைப்புத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென தொலைபேசி ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனிடம் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழு நிறைவேற்றுத்துறை சார்ந்தது அல்ல என்பதாலும் தமிழ்மக்கள் சார்ந்த அரசியலைப்புத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென பிரதமர் என்னிடம் கோரிக்கை விடுத்ததாலுமே நான் இதற்கு சம்மதித்தேன் என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!