பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை: பரீட்சை திணைக்களம் அறிவிப்பு
Mayoorikka
3 years ago
கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது.
இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் என்பனவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான வினாப்பத்திரங்கள் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.